/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வம் பலத்தை அறிய நல்ல வாய்ப்பு என கருத்து
/
மதுரையில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வம் பலத்தை அறிய நல்ல வாய்ப்பு என கருத்து
மதுரையில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வம் பலத்தை அறிய நல்ல வாய்ப்பு என கருத்து
மதுரையில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வம் பலத்தை அறிய நல்ல வாய்ப்பு என கருத்து
ADDED : மார் 05, 2024 03:44 AM
மதுரை, :தமிழக பா.ஜ., கூட்டணி இதுவரை முடிவடையாத நிலையில் தங்களுக்கு சாதகமான தொகுதிகள் எது, யாரை வேட்பாளராக்கலாம் என சர்வே செய்து வருகின்றனர். அப்பட்டியலில் மதுரையும் உள்ளது.
இங்கு திராவிட கட்சிகளையடுத்து பா.ஜ.,வுக்கும் கணிசமான ஓட்டுக்களை பெற்றுத் தரும் பகுதிகள் உள்ளன. எனவே தங்கள் வளர்ச்சியை அறிய வாய்ப்புள்ளதாக கருதுவதால், மதுரையில் பா.ஜ., போட்டி நிச்சயம் என்கின்றனர்.
போட்டியிட ஆர்வம் காட்டுவோரில் ஒருவர் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி. சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவர், 2011ல் மாநகராட்சி, 2016ல் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு அறிமுகமாகியுள்ளார். மதுரை மக்களுடன் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சி மூலம் இலவச மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகளை செய்கிறார்.
போட்டியில் மற்றொரு பிரமுகர் முன்னாள் மாவட்ட தலைவர் ரவிபாலா 1996 முதல் கட்சியில் உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பின்னணி உள்ள இவரும் பல பதவிகளை வகித்து, மாவட்ட தலைவரானார். தற்போது திண்டுக்கல், தேனி தொகுதிகளுக்கு பார்வையாளராக உள்ளார். தொழிலதிபரான இவருக்கு முக்குலத்தோர் சமுதாய பின்னணியும் உள்ளதால் 'சீட்' வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இவர்களைத் தவிர விருதுநகரில் போட்டியிட காய்களை நகர்த்தி வரும் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், விருதுநகர் கிடைக்காவிட்டால் மதுரையில் போட்டியிடலாம்.
மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினமும், மேற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் அறிமுகம் உள்ளதால் முயற்சிக்கிறார். விவசாய அணி பிரிவு மாநில துணைத்தலைவர் சசிராமன், ஆர்.எஸ்.எஸ்., பின்னணி உள்ள கே.கே.ஸ்ரீனிவாசன் என பலரும் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.
எத்தனை பேர் முயற்சித்தாலும் மாநில கட்சித் தலைமை இளைஞரையே களமிறக்க நினைக்கிறது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தலில் 86 தொகுதிகளுக்கு பொறுப்பேற்றபோது 60 இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தார்.
அவர்களில் 36 பேர் வெற்றி பெற்றனர். அதுபோன்ற இளைஞர்களால்தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இயலும் என கருதுவதால் இளைஞருக்கே அதிக வாய்ப்பு என நிர்வாகிகள் கூறுகின்றனர்.

