/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
18 மாதங்களாச்சு; குடிநீர் என்னாச்சு
/
18 மாதங்களாச்சு; குடிநீர் என்னாச்சு
ADDED : மே 27, 2025 01:08 AM

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுத்துவிட்டு குடிநீர் வினியோகிக்கவில்லை.
இக்கிராம இந்திரா நகரில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை நீர் சப்ளை செய்யப்படுகிறது. 18 மாதங்களுக்கு முன் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீர் வழங்க வீடுகளுக்கும் குழாய் பதிக்கப்பட்டது. இதுவரை குடிநீர் வினியோகிக்கவில்லை.
பஞ்சவர்ணம் : பதிக்கப்பட்ட குழாய்களில் பல பயன்பாட்டிற்கு வராமலேயே உடைந்து விட்டன. எங்கள் கிராமத்தின் வழியாக பிற கிராமங்களுக்கு காவிரி குடிநீர் செல்கிறது. எங்கள் கிராமத்திற்கு வரவில்லை. ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு வாங்குகிறோம். காவிரி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பஞ்சவர்ணம்