/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டி 6 மாசம் ஆச்சு திறப்பு விழா என்னாச்சு
/
கட்டி 6 மாசம் ஆச்சு திறப்பு விழா என்னாச்சு
ADDED : ஜன 02, 2026 06:15 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடையை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு தென்கரை கண்மாய் செல்லும் ரோட்டில் கூட்டுறவு சங்கத்திற்கு அருகே மத்திய அரசு நிதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.56 லட்சம் மதிப்பில் உணவு தானியகிடங்கு, ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் காட்சிப் பொருளாக உள்ளது.
இதனால் அவ்வழியே செல்வோர் இளைப்பாறும் இடமாகவும், இரவில் மது பிரியர்கள், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், மாறி வருகிறது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடையை திறக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எம்.எல்.ஏ., மூலம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. விரைவில் திறக்கப்படும்' என்றனர்.

