/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டி முடித்து 7 மாதமாச்சு திறப்பு விழா என்னாச்சு
/
கட்டி முடித்து 7 மாதமாச்சு திறப்பு விழா என்னாச்சு
ADDED : ஜூன் 18, 2025 04:18 AM

மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட அவசர சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் இடப்பற்றாக்குறைவான இடத்தில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இம்மருத்துவமனை 1925 முதல் செயல்படுகிறது. 1200 க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இடப்பற்றாக்குறையை போக்க ரூ.9.23 கோடியில் 60 பெட் ,அறுவை சிகிச்சை மையம், சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையம் கட்டப்பட்டது. 7 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
சமூக ஆர்வலர் ஸ்டாலின்: விபத்தில் காயமடைந்தவர்களை 30 கி.மீ., துாரத்தில் உள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிலர் இறந்து விடுகின்றனர். அவசர சிகிச்சை மையம் கட்டி முடிக்கப்பட்டு 7 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பயன்பாட்டிற்கு வரும் முன்பே சில இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. அவசர சிகிச்சை மையத்தின் எழுத்துக்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. தற்போது வரை இடப்பற்றாக்குறையான இடத்தில் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. தலைக்காய சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்க ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.