/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொட்டி கட்டி 8 மாதமாச்சு பயன்பாடு என்னாச்சு
/
தொட்டி கட்டி 8 மாதமாச்சு பயன்பாடு என்னாச்சு
ADDED : ஏப் 15, 2025 06:42 AM
மேலுார்: கிடாரிப்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி மற்றும் எம்.ஜி.ஆர்., நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதி மக்களுக்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேலத்தோப்பில் ரூ.10 லட்சம் செலவில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. பணிகள் முடிந்து எட்டு மாதம் ஆகிறது.
இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால் மக்கள் குடிதண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். பல கி.மீ., துாரம் தண்ணீரை தேடி அலைகின்றனர். விவசாயத்துக்கு பயன்படுத்தும் பாசன நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். இத் தண்ணீரும் தினமும் கிடைக்காததால் குடிதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர்.
அதனால் மேல்நிலை தொட்டியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.