/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாக்டோ - ஜியோ மறியல்; மதுரையில் 683 பேர் கைது
/
ஜாக்டோ - ஜியோ மறியல்; மதுரையில் 683 பேர் கைது
ADDED : ஜன 31, 2024 07:04 AM

மதுரை : மதுரையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 683 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சரண்டர் விடுப்பு, தொகுப்பு, சிறப்பு ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம், சி, டி பிரிவில் அவுட்சோர்ஸிங் முறையில் நியமனத்தை கைவிடுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியில் துவங்கிய இப்போராட்டம் முடிவுக்கு வராததால் நேற்று மாநில அளவில் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே மறியல் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீதிராஜா, பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜா, கண்ணன் தலைமை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், செல்வம் துவக்கி வைத்து பேசினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ''முதல்வரின் மவுனத்தால் போராட்டம் தீவிரமடைந்து மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு செல்லும். எனவே தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்றனர். 683 பேரை போலீசார் கைது செய்தனர்.