/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
/
மதுரையில் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
ADDED : மார் 24, 2025 05:26 AM

மதுரை: முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியறுத்தி மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
மதுரை பழங்காநத்தத்தில் நடந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், நிர்வாகிகள் சுரேஷ் பிரடெரிக், மணிமேகலை, இலக்கியா, செந்தில்வள்ளி.
பழைய ஓய்வூதிய மீட்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், நவநீத கிருஷ்ணன், பாண்டி, பொற்செல்வன், ஜோயல்ராஜ், தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டும். தொடக்க கல்வியில் 90 சதவீத ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் போன்றோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள முப்பது சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2002 - 2004 வரை தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.