/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெயின் வித்யாலயாவில் ஐ.பி.சி.பி., பாடத்திட்டம்
/
ஜெயின் வித்யாலயாவில் ஐ.பி.சி.பி., பாடத்திட்டம்
ADDED : ஜன 12, 2025 04:35 AM
திருப்பாலை : திருப்பாலை ஜெயின் வித்யாலயாவில் புதிதாக 'இன்டர்நேஷனல் பேக்கலரேட் கரியர் ரிலேடட் புரோகிராம்' (ஐ.பி.சி.பி.,) பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மூலம் தென் தமிழகத்தில் உலகத்தரத்திலான கல்வியை வழங்கும் புதிய முயற்சியை இப்பள்ளி முன்னெடுத்துள்ளது. 11ம் வகுப்பு முதல் துவங்கும் இப்பாடத்திட்டம் மாணவர்களுக்கு நவீன கல்வி, திறன் வளர்ச்சியை உறுதி செய்வதுடன் தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குகிறது.
தொழில்முனைவோருக்கு தேவையான திறன்களை அதிகரிக்க, மொழித் திறனை மேம்படுத்தி பலதரப்பட்ட கலாசாரங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற இப்பாடத்திட்டம் வழிவகுக்கும்.
இதில் தொழில் சார்ந்த பாடமாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) கல்வி வழங்கப்படுகிறது. இது வருங்கால தொழில் வாய்ப்புகளில், டிஜிட்டல் உலகில் மாணவர்கள்முன்னணி இடத்தை பெற உதவும். தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுத்து புதிய யுகத்தின் பண்புகளை அவர்கள் ஆராயவும், செயல்படுத்தவும் இப்பாடத்திட்டம் உதவும்.
அறிவுத் தேடலில் மாணவர்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். தகவல்களுக்கு www.jainvidyalaya.in அல்லது 86088 22000ல் தொடர்பு கொள்ளலாம்.

