
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் ஜாக்டோ ஜியோ நேற்று பேரணி நடத்தினர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். மே 24 ல் போராட்ட ஆயத்த மாநாடு நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக நேற்று பேரணி நடந்தது.
மதுரையில் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜ், தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர். உலகத் தமிழ்ச்சங்கம் அருகே துவங்கி பேரணி கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.