/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுார், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
/
அலங்காநல்லுார், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
அலங்காநல்லுார், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
அலங்காநல்லுார், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பந்தல்கால் நடும் விழா
ADDED : ஜன 04, 2025 04:10 AM

அலங்காநல்லுார்: பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜன.15,16ல் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக பந்தல்கால் நடும் விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ., வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, எஸ்.பி., அர்விந்த், டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி முன்னிலை வகித்தனர். முன்னதாக மஞ்சமலை சுவாமி மற்றும் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஜல்லிக்கட்டு விழா குழுத் தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சந்திரன், பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மச்சவேல், பிரபு, கார்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சசிகலா, ஜெயலட்சுமி (பொறுப்பு) பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி, துணைத் தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''கடந்த ஆண்டை விட ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடத்தப்படும். 800 முதல் 900 காளைகள் வரை அவிழ்க்கப்படும்'' என்றார்.