ADDED : பிப் 11, 2025 05:17 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்றும், நாளையும்(பிப்.,11,12) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அமைச்சர் மூர்த்தி காலை 7:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் இரண்டு நாட்களுக்கு தலா 800 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். காளை, வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
எஸ்.பி., அரவிந்த் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காளை மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஆர்.டி.ஓ., ஷாலினி, தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி., அரவிந்த்ராஜ், வருவாய்த்
துறையினர் ஆய்வு செய்தனர்.
பிப்.16ல் சோழவந்தான் தொகுதி காளைகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடக்குகிறது.