/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜேம்ஸ் அண்ட் கோ புதிய 5 கிளைகள் திறப்பு விழா
/
ஜேம்ஸ் அண்ட் கோ புதிய 5 கிளைகள் திறப்பு விழா
ADDED : அக் 03, 2025 01:26 AM

மதுரை: மதுரையில் ஜேம்ஸ் அண்ட் கோ நேற்று ஒரே நாளில் தனது புதிய ஐந்து கிளைகளை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் 170 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படும் டார்லிங்-ஜேம்ஸ் ஹோம் அப்ளயன்சஸ் நிறுவனம் நேற்று மதுரையில் சிக்கந்தர் சாவடி, பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை, கே. புதுார், மேலுார் என 5 பகுதியில் கிளைகளை துவக்கியுள்ளது.
கே.புதுார் கிளையை டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் நவீன் முன்னிலையில், கட்டட உரிமையாளர்கள் அசோக்குமார், மனோஜ்குமார், ஹரீஷ்குமார் துவக்கி வைத்தனர். பழங்காநத்தம் கிளையை டார்லிங் ஜேம்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் முன்னிலையில் கட்டட உரிமையாளர் ஆரோக்கியசாமி சேவியர் திறந்து வைத்தார்.
நாகமலை புதுக்கோட்டை கிளையை டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் நவராஜமுருகன் முன்னிலையில், கட்டட உரிமையாளர்கள் பேராசிரியர் குணசேகரன், காமாட்சி திறந்து வைத்தனர். சிக்கந்தர் சாவடி கிளையை ஜேம்ஸ் ரீடெய்ல் நிறுவன இணை இயக்குநர் மெல்வின் மார்க் முன்னிலையில் கட்டட உரிமையாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
மேலுார் கிளையை ஜேம்ஸ் அண்ட் கோ இயக்குநர் ஆண்டனி ஜேம்ஸ்ராஜ் முன்னிலையில் கட்டட உரிமையாளர் மீராபாய் திறந்து வைத்தார்.
டார்லிங் ஜேம்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் கூறியதாவது: மதுரையில் 2018ல் ரயில்வே ஸ்டேஷன் அருகே துவங்கி, இன்று மதுரையில் மட்டும் 4 லட்சம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
புதிய கிளைகளில் 70 சதவீத தள்ளுபடியுடன், நிச்சயப் பரிசுகள், பிரத்யேக இ.எம்.ஐ., வசதிகளுடன் தீபாவளி விற்பனை துவக்கியுள்ளோம். இங்கு ் எந்த அப்ளயன்சஸ் வாங்கினாலும் ஏற்கனவே தரும், குறைந்த விலை, மிக குறைந்த இ.எம்.ஐ., உடன் 43 இன்ச் டிவி, சோபா போன்ற நிச்சயப் பரிசுகள், ரூ.15 ஆயிரம் வரை எக்ஸேஞ்ச் போனஸ், ரூ.20 ஆயிரம் வரை பர்னிச்சர் கூப்பன் உட்பட அதிரடி தள்ளுபடிகளும் உண்டு என்றார்.