ADDED : ஜன 08, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தமிழகத்தில் வரும், 10ம் தேதி வரை கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது.இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
ஜன. 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்.