ADDED : அக் 30, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள், இளைஞர்களுக்கு மல்லிகை, முருங்கை ஏற்றுமதி தர நிலை குறித்த இலவச பயிற்சி திருப்பரங்குன்றம் பராம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நவ.5 முதல் 20 வரை அளிக்கப்படுகிறது.
துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மல்லிகை, முருங்கை பயிர்களுக்கான சாகுபடி, நோய், பூச்சிக் கட்டுப்பாட்டு முறை, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். கண்டுணர்வு பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். 8வது தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 86100 32763.

