ADDED : பிப் 25, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
கே.கே.நகரில் உள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, டி.குன்னத்துார் அம்மா கோயிலில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மரியாதை செலுத்தினர். மேலுார் அ.வலையபட்டியில் எம்.எம்.ஏ., பெரியபுள்ளான் தலைமை வகித்தார். உசிலம்பட்டியில் அமைப்புச்செயலாளர் மகேந்திரன், பன்னீர்செல்வம் அணி தரப்பில் அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.