ADDED : ஆக 14, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91வது ஜெயந்தி விழா குரு வந்தனத்துடன் துவங்கியது.
ருத்ர ஏகாதசி நடத்தப்பட்டு ஜெயேந்திரர் விக்ரகத்திற்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மாலை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சிவானந்த லகரி சொற் பொழிவு நடந்தது.
முள்ளிப்பள்ளம் கிளை மடத்தில் ஜெயேந்திரர் ஜெயந்தியை முன்னிட்டு உபநிஷத் பாராயணம், நாம சங்கீர்த்தனம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
இங்கு நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஏழை மாணவ மாணவியர்களுக்கு மாலை நேர இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக் கின்றன.