/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயேந்திரர்
/
அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயேந்திரர்
அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயேந்திரர்
அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயேந்திரர்
ADDED : ஆக 12, 2025 11:27 AM

அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹர முத்தையர் பேசினார்.
91ஆவது ஜெயந்தி விழா
காஞ்சி காமகோடி பீடாதிபதி முக்தி அடைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ். எஸ்.காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோவிலில் நடைபெற்றது மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் நிகழ்விற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்
விழாவில் மாநில செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர் நிகழ்வில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹர முத்தையர் ஜெயந்தி உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் பேசியதாவது
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு ஸ்ரீ ஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜனக்கல்யாண் என்கிற அமைப்பை நிறுவி பல்வேறு மக்களுக்காக பாடுபட்டவர் .அதுவும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் நலனுக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
இன்று அயோத்தியில் நாம் ஸ்ரீ ராமரை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அதற்காக உழைத்தவர் அவர்.அவர் விட்டுச் சென்ற பணியை நாம் நிறைவேற்றுவது தான் அவரது ஜெயந்தி நாளில் அவருக்கு நாம் கொடுக்கிற மரியாதை ஆகும்.இவ்வாறு அவர் பேசினார்.