/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே கடையை பலருக்கு வாடகை விட்ட 'ஜெகஜால கில்லாடி' மதுரையில் கைது
/
ஒரே கடையை பலருக்கு வாடகை விட்ட 'ஜெகஜால கில்லாடி' மதுரையில் கைது
ஒரே கடையை பலருக்கு வாடகை விட்ட 'ஜெகஜால கில்லாடி' மதுரையில் கைது
ஒரே கடையை பலருக்கு வாடகை விட்ட 'ஜெகஜால கில்லாடி' மதுரையில் கைது
ADDED : ஜன 29, 2025 01:44 AM

மதுரை:மதுரையில் ஒரே கடையை பலருக்கு வாடகைக்கு விட்டு, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பகத்சிங், 45, என்பவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கோச்சடை மாரியம்மாள், ஜூஸ் கடை நடத்துகிறார். பாத்திமா கல்லுாரி அருகே திண்டுக்கல் மெயின் ரோட்டில் விளாங்குடி பகத்சிங் என்பவரது கடையில், ஜூஸ் கடை நடத்த வாடகைக்கு அணுகினார்.
அட்வான்ஸ்
'மாதம் 12,000 ரூபாய் வாடகை, அட்வான்ஸ் 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என பகத்சிங் தெரிவித்தார். அதை ஏற்று அட்வான்ஸ் தொகையை கொடுத்தனர்.
'நான்கு நாட்களில் வெள்ளை அடித்துத் தருகிறேன்' எனக்கூறி அனுப்பினார். பத்து நாட்களாகியும் கடை சாவியை தராமல் ஏமாற்றினார். மொபைல் போனையும் எடுக்கவில்லை.
இதனால் அவரை தேடி வீட்டிற்கு கணவருடன் மாரியம்மாள் சென்றபோது, அங்கு தல்லாகுளத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நின்றிருந்தார்.
அவரிடம் விசாரித்தபோது, தனக்கு கடையை வாடகைக்கு விடுவதாகக் கூறி, பகத்சிங் 2.50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பெற்றதாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த மாரியம்மாள், தன்னிடமும் அட்வான்ஸ் வாங்கியிருப்பதாகக் கூற, வசந்தி அதிர்ச்சி அடைந்தார்.
பிரியாணி கடை
பின், இருவரும் தங்களுக்கு வாடகைக்கு விடுவதாகக் கூறிய கடைக்கு சென்றபோது அங்கு பிரியாணி கடை இருந்தது.
அந்த கடை உரிமையாளர் ரமேஷிடம் கேட்டபோது, ஆறு மாதமாக மாதம் 12,000 ரூபாய்க்கு கடையை நடத்தி வருவதாகவும், அட்வான்ஸ் ரூ.5.35 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்தியும், மாரியம்மாளும் தனித்தனியே கூடல்புதுார் போலீசில் புகார் செய்தனர். பகத்சிங்கை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

