நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரியில் உடுமலைப்பேட்டை ராஜலட்சுமி ரினிவபிள் எனர்ஜி நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர்.
கல்லுாரி இணைச் செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். நிறுவனத்தின் துணை மேலாளர் பாஸ்கரன், உதவி மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளின் 56 மாணவர்கள் கலந்து கொண்டதில் 16 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இம் மாணவர்களை கல்லுாரி துணை முதல்வர் ஜெயா பிரசாத், செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், திறன் மேம்பாட்டு தலைவர் பால் நிக்சன் பாராட்டினர். ஏற்பாடுகளை ஆங்கிலம், கணினி துறை பேராசிரியர்கள் முரளி, வனிதா செய்திருந்தனர்.

