ADDED : ஆக 19, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைநாடுநரும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை www.tnprivatejobs.in என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் பணிவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்வகையிலும் பாதிக்காது என அறிவித்துள்ளனர்.