ADDED : அக் 19, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் பெண்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேவை என அய்யப்பன் எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடங்கள் இருந்த பகுதியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கதிரவன், உதவி செயற்பொறியாளர் தங்கரத்தினம் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். வி.ஏ.ஓ., சக்திகுமார், சர்வேயர் ஜெயராமன், அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.