/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே நேரத்தில் கொள்முதல் மையம் திறக்கப்படும் வேளாண் இணை இயக்குநர் தகவல்
/
ஒரே நேரத்தில் கொள்முதல் மையம் திறக்கப்படும் வேளாண் இணை இயக்குநர் தகவல்
ஒரே நேரத்தில் கொள்முதல் மையம் திறக்கப்படும் வேளாண் இணை இயக்குநர் தகவல்
ஒரே நேரத்தில் கொள்முதல் மையம் திறக்கப்படும் வேளாண் இணை இயக்குநர் தகவல்
ADDED : ஆக 30, 2025 04:17 AM
மதுரை: 'மதுரை மாவட்டத்தில் நெல் பயிரிடும் வருவாய் கிராமங்களில் ஒரே நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்படும்' என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.
மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நெல் கொள் முதல் மையங்களில் நெல்லை விற்கும் போது மூடைக்கு ரூ.65 முதல் கமிஷன் பெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து நெல் கொள்முதல் பிரச்னைகளுக்கு விவசாயிகளுடன் வேளாண் துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் பிரவீன்குமார் கடந்த வாரம் தெரிவித்தார்.
இதையடுத்து வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இணை இயக்குநர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் பங்கேற்றனர்.
முருகேசன் கூறியதாவது: விவசாயிகள் வெவ்வேறு மையங்களுக்கு நெல்லை கொண்டு செல்வதால் எந்த மையத்தில் எவ்வளவு மூடைகள் உண்மையான விவசாயிகளுக்கானது என்பதை கணக்கிடுவதில் குழப்பம் நீடித்தது. அதைத் தீர்க்கும் வகையில் வருவாய் கிராமங்களில் ஒரே நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த மையம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அங்கு தான் மூடைகளை கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு வருவாய் கிராமத்தில் அதிகபட்சம் 1000 ஏக்கர் நெல் பயிரிடும் போது சராசரியாக ஏக்கருக்கு 2.5 டன் வீதம் 2500 டன் நெல் கிடைக்கும். இது தான் அடிப்படை. இந்த அளவைத் தாண்டும் மையங்கள் கண்காணிக்கப்படும். விவசாயிகள் மையங்களில் உள்ளவர்களுக்கு மூடைக்கு இவ்வளவு என கமிஷன் தரவேண்டாம் என்றார்.