/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருங்கால கமல் தான் ஜோசப் விஜய்; ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கிண்டல்
/
வருங்கால கமல் தான் ஜோசப் விஜய்; ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கிண்டல்
வருங்கால கமல் தான் ஜோசப் விஜய்; ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கிண்டல்
வருங்கால கமல் தான் ஜோசப் விஜய்; ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கிண்டல்
ADDED : அக் 13, 2025 05:21 AM

மதுரை : ''கமலின் மக்கள் நீதி மையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தி.மு.க., கொண்டு வந்து விடும்.
வருங்கால கமல்ஹாசன்தான் ஜோசப் விஜய்; வருங்கால மக்கள் நீதி மையம்தான் தமிழக வெற்றிக்கழகம்,'' என, மதுரையில் ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு தொடர்பாக அர்ஜூன் சம்பத், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான தீர்ப்பில் கிடைத்த வெற்றி முருகனுக்கு கிடைத்த வெற்றி.
முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி. இதுகுறித்து முஸ்லிம் பெரியவர்கள் மதநல்லிணக்க தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீர்ப்புக்காக நீதிபதி ஸ்ரீமதியை சிலர் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. திருப்பரங்குன்றத்தின் முழு மலையும் லிங்கமாக, புனிதமாக கருதப்படுகிறது. மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இதில் எதிர்த்தரப்பினர் மேல்முறையீடு சென்றாலும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்றனர்.
குற்ற உணர்வு இல்லையே பின் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: விஜய் தன் சுயநலத்திற்காக கரூரில் ரசிகர்களை காக்க வைத்தது வெட்கக்கேடு. நாற்பது உயிர்கள் பலியானதற்கு அவரே காரணம். கூட்டம் திரண்டு, மக்கள் காத்திருப்பதுதான் கெத்து என்ற ரசிகர் மன்ற மனப்பான்மையில் த.வெ.க.,வினர் உள்ளனர்.
தன்னால் ஏராளமான ரசிகர்களின் உயிர் பறிபோய்விட்டதே என்ற குற்ற உணர்வு விஜய்க்கு இருக்க வேண்டுமா, இல்லையா. இதில் ஆளுங்கட்சி மீதும் தவறு இருக்கிறது. விஜய் வரத்தாமதமான பின்பும் தடை விதிக்காமல் வேண்டும் என்றே நடத்த விட்டுள்ளனர்.
மக்கள் உயிரை காப்பாற்றத்தவறிய தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கரூர் துயர சம்பவத்திற்கு காரணமான விஜய்யை கைது செய்து த.வெ.க., கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மற்றொரு கமல் மக்களை ஏமாற்றும் விஜய்யை தமிழக மக்கள் புறக்கணிப்பர். தி.மு.க., எப்படி கமல்ஹாசனை தங்களின் பக்கம் இழுத்து மக்கள் நீதி மையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதேபோல் கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யையும் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். எனவே வருங்கால கமல்ஹாசன்தான் ஜோசப் விஜய்; வருங்கால மக்கள் நீதி மையம் தான் தமிழக வெற்றிக்கழகம்.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு போல் விரைவில் திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன என்றார்.