/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊற்றெடுக்கும் கிணறுகளால் மகிழ்ச்சி
/
ஊற்றெடுக்கும் கிணறுகளால் மகிழ்ச்சி
ADDED : ஜன 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் :  பேரையூர் பகுதிகிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இத்தாலுகாவில் சில வாரங்களாக மழை பெய்ததால் பேரையூர், டி. கல்லுப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, சேடபட்டி, சின்னகட்டளை, சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய், குளம், ஓடை உடைப்புகளில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி கிணறுகளில் ஊற்று நீரால் நிரம்பி வருகிறது. இதனால் நெல், காய்கறி பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

