தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி


ADDED : பிப் 15, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு கேரம் சங்கம், மதுரை மாவட்ட கேரம் சங்கம், அகில இந்திய கேரம் சம்மேளனம் சார்பில் தேசிய ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மதுரை பொட்டப்பாளையம் எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

அமைச்சர் மூர்த்தி போட்டியை துவக்கி வைத்தார்.

பெண்கள் ஒற்றையர் 18 வயது பிரிவில் தமிழக அணியின் பரக்கத் நிஷா தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். காசிமா 2 வது இடம், விதர்பா அணியின் சிம்ரன் 3வது இடம் வென்றனர்.

ஆண்கள் ஒற்றையர் 18 வயது பிரிவில் மகாராஷ்டிரா மாநில ஷேக் முகமது ரசாக் தேசிய சாம்பியன் பட்டம், மிகிர் ரபிக் சேக் 2 வது இடம், டில்லி அணியின் பைஷ் குரேசி 3வது இடம் வென்றனர்.

பெண்கள் ஒற்றையர் 21 வயது பிரிவில் கர்நாடகாவின் ஷைனி தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தின் அஸ்விகா 2வது இடம், ராஜேஸ்வரி 3 வது இடத்தை வென்றனர்.

ஆண்கள் ஒற்றையர் 21 வயது பிரிவில் தமிழகத்தின் முசாரப் சாம்பியன் பட்டம் வென்றார். அசாம் மாநில வகிப் இக்பால் உசேன் 2வது இடம், ஏ.ஏ.ஐ. அணியின் சிவ் தயால் யாதவ் 3வது இடம் வென்றனர்.

பரிசளிப்பு விழாவில் கேரம் சங்க பொதுச்செயலாளர் மரிய இருதயம் வரவேற்றார். தலைவர் நாசர்கான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

சர்வேதேச கேரம் சம்மேளன பொதுச்செயலாளர் நாராயண், தேசிய பொதுச்செயலாளர் பார்தி நாராயண், சிஷ்கா கேரம் போர்டு நிறுவன உரிமையாளர் அதுல்மெகரா, எஸ்.ஆர்.எம்., கல்வி குழும நிர்வாகி மனோகரன், முதல்வர் துரைராஜ் கலந்து கொண்டனர். அரியலுார் மீனாட்சி ராமசாமி கல்வி குழுமத் தாளாளர் ரகுநாதன் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us