ADDED : டிச 29, 2024 04:33 AM
மதுரை: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பேஸ் - 1 கிரிக்கெட் போட்டி மதுரையில் நடந்து வருகிறது.
போட்டி முடிவுகள் :
முதல் நாளில் கல்வி சர்வதேச பள்ளி, டி.வி.எஸ். பள்ளி அணிகள் மோதின. கல்வி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய டி.வி.எஸ். அணி 19.1 ஓவர்களில் 98 ரன் எடுத்தது. கல்வி அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேலம்மாள் போதி பள்ளி, நல்லமணி மெட்ரிக் பள்ளிகள் மோதியதில் நல்லமணி பள்ளி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன் எடுத்தது. வேலம்மாள் அணி 5.2 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாம் நாளில் வேலம்மாள் போதி பள்ளி, கிரேஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. கிரேஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய போதி அணி 17.4 ஓவர்களில் 92 ரன் எடுத்தது. கிரேஸ் அணி 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கல்வி சர்வதேச பள்ளி, லீ சாட்லியர் பள்ளி அணிகள் மோதின.
கல்வி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய லீ சாட்லியர் அணி 19 ஓவர்களில் 92 ரன் எடுத்தது. கல்வி அணி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில் கல்வி அணி, கிரேஸ் அணிகள் மோதின. கல்வி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய கிரேஸ் அணி 15.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.