/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்னும் ஒரு வாரம்தான்: ஜல்லிக்கட்டு மைதான பணிகள் முடிந்துவிடும்: முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறக்கிறார்

ADDED : ஜன 04, 2024 02:33 AM

அலங்காநல்லுார்: 'அலங்காநல்லுார் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும். விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அலங்காநல்லுார் கீழக்கரை வகுத்துமலை அடிவாரத்தில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி வாடிவாசலில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள், பார்வையாளர் மாடம், காளைகள் சேகரிக்கும் பகுதியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் கூறுகையில், ''மைதானம், அதற்கான சாலை பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. ஒரு வாரத்திற்குள் பணிகள் முடியும். முதல்வர் விரைவில் திறப்பார்'' என்றார்.
கலெக்டர் சங்கீதா, எஸ்.பி., சிவபிரசாத், எம்.எல்.ஏ., வெங்கடேசன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், தலைமை பொறியாளர் ரகுநாதன், செயற்பொறியாளர் செந்துார் உடனிருந்தனர்.
அமைச்சர் கண்டிப்பு
இந்த மைதான சாலை வசதிக்காக ஆர்ஜிதம் செய்த நில உரிமையாளர்களுக்கு அதற்கான தொகை வழங்கவில்லை. அவர்கள் அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு 'ஏன் தாமதிக்கிறீர்கள். நீங்கள் இடம் மாறி சென்று விடுவீர்கள். நான் இந்த மக்களுடன் இருப்பவன். அவர்களை சந்திக்க வேண்டும்' என கடிந்து கொண்டார்.
'கிராமத்திற்கே வந்து காசோலை வழங்கப்படும்' என கலெக்டர் தெரிவித்தார்.