ADDED : மே 31, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மத்திய அரசு நிதியுதவிமூலம் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் சணல் சார்ந்த பைகள் தைப்பது குறித்து 50 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
சணல் ஹேண்ட்பேக், லேப்டாப், ஸ்கூல், லஞ்ச் பேக், வாட்டர் கேன், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பைகள் தயாரிக்க கற்றுத்தரப்படும். பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். மத்திய அரசு சான்றிதழ், கைவினை கலைஞருக்கான அடையாள அட்டை பெற்று, தொழில் துவங்குவதற்கான உதயம் சான்றிதழ் பெற்றுத்தரப்படும்.
பயிற்சியுடன் ஆன்லைன் வியாபாரம், சந்தைப்படுத்துதல், தொழில் துவங்குவதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மானியத்துடன்கூடிய வங்கிக்கடன் பெற்று தரப்படும். அலைபேசி: 90950 54177.