ADDED : மார் 17, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பலநுாறு பக்தர்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து மார்ச் 22 கோயில் பூசாரி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, மார்ச் 23ல் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவர். மாலை பூத்தட்டு ஊர்வலம் நடைபெறும். மார்ச் 24 ல் கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். மார்ச் 25 ல் பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.