தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 25, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா எஸ்.பி.நத்தத்தில் புதிய கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி, கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எஸ்.பி.நத்தம், பெருமாள் பட்டி, லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், சோழபுரம், ஆதிபுரம், வீரப்பெருமாள்புரம், வலையங்குளம், அரசபட்டி, சென்னம்பட்டி கிராமங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தில் கல்குவாரி அமைக்க தனியார் சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. தற்போது அனுமதி வழங்கியுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கிராம மக்கள் கூறியதாவது: குவாரிக்கு அனுமதி வழங்கிய இடம் கமண்டல நதி ஆற்றில் இருந்து 5 மீட்டர் தொலைவிலும், ஆதிபுரம் கிராமத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக் குவாரி அமைந்தால் கிராமத்தின் நீராதாரம் பாதிக்கப்படும். கமண்டல நதியின் போக்கு மாறி மழைக்காலங்களில் கிராமப் பகுதிக்குள் வெள்ளம் பாயும் சூழல் உருவாகும். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்த போது உதவி இயக்குனரை அனுப்பி விசாரிப்பதாக தெரிவித்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

ஆர்.டி.ஓ., சிவஜோதியின் நேர்முக உதவியாளர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us