ADDED : பிப் 12, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளர்ச்சிப் பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.
கள்ளழகர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு வந்த 23 விருந்து மண்டபங்கள், சோலைமலை முருகன் கோயில் செல்லும் மலைப்பாதை ரோடு, சஷ்டி மண்டபம், பெரியாழ்வார் திருவரசு பூங்கா பணிகள் ஆறுமாதங்களாக நடக்கிறது. பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று கோயில் நிர்வாகம் இப்பணிகளை விரைந்து முடித்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன் விருந்து மண்டபம் திறப்பு விழாக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். அவருடன் தலைமை செயற்பொறியாளர் செல்வராஜ், மண்டல செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி செய்ற்பொறியாளர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.