/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காமராஜ் பல்கலை மண்டல விளையாட்டு போட்டிகள்
/
காமராஜ் பல்கலை மண்டல விளையாட்டு போட்டிகள்
ADDED : ஆக 04, 2025 05:04 AM

சோழவந்தான்: சோழவந்தான் விவேகானந்தா கல்லுாரியில் காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், செஸ் போட்டிகள் நடந்தன.
கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லுாரி துணை முதல்வர் சந்திரசேகர் துவக்கி வைத்தனர்.
செஸ் போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதலிடம், மதுரைக் கல்லுாரி 2 ம் இடத்தை பெற்றன.டேபிள் டென்னிஸ் போட்டியில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதலிடம், மதுரை கல்லுாரி 2 ம் இடம் பெற்றன. பாட்மின்டன் போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி முதலிடம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி 2 ம் இடம் பெற்றன. போட்டிகளை விவேகானந்தா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நிரேந்தன் ஒருங்கிணைப்பு செய்தார்.