/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்
/
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்
ADDED : பிப் 21, 2025 08:04 AM

மதுரை: மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப்பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.