sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோலைமலையில் கந்த சஷ்டி விழா  அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்

/

சோலைமலையில் கந்த சஷ்டி விழா  அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்

சோலைமலையில் கந்த சஷ்டி விழா  அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்

சோலைமலையில் கந்த சஷ்டி விழா  அக்.22ல் துவக்கம்: அக்.27ல் சூரசம்ஹாரம்


ADDED : அக் 12, 2025 04:18 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலையில் 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா அக். 22ல் துவங்குகிறது. அக். 27ல் சூரசம்ஹாரம், அக். 28ல் திருக்கல்யாண நடக்கிறது.

இந்தாண்டுக்கான விழா, அக். 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று காலை 7:00 மணி முதலே பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். அக். 26 வரை தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகள், காலை 10:00 மணிக்கு சண்முகார்ச்சணை, காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தினமும் மாலை 4:00 மணிக்கு அறுபடை வீடுகளை குறிக்கும் வகையில் சந்தன அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

சூரசம்ஹாரம் விழாவின் 6ம் நாளான அக். 27 மாலை 4:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வேல் வாங்கும் வைபவம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, கோயிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரணை, அக்னி திக்கில் சிங்கமுகா சூரணை, தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மா சூரணைசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம் செய்யப்பட்டுதீபாராதனை நடக்கிறது. பின் அவ்வைக்கு நாவல் கனி கொடுக்கும்சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

அக். 28 காலை 10:45 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு நித்திய உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், அன்னப்பாவாடை தரிசனத்துடன் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்று மாலை அறுபடை வீடு முருகன் அலங்கார தரிசனமும், மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறங்காவலர்கள், கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us