நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தும்பைபட்டி காரைக்குடியார் பள்ளிவாசலில் கந்துாரி விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் சாகுல் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் ஜெய்னுலாபிதீன், காஜாமைதீன், பீர்முகமது, ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர்.
உலக அமைதி, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் தும்பைபட்டி, அம்பலகாரன்பட்டி அம்பலக்காரர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டனர். அனைத்து சமுதாய மக்களுக்கும் கந்துாரி வழங்கப்பட்டது.

