/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஹைமாஸ்' விளக்கை எப்போ சரிசெய்வீங்க
/
'ஹைமாஸ்' விளக்கை எப்போ சரிசெய்வீங்க
ADDED : அக் 28, 2025 03:58 AM
மேலுார்: முத்துச்சாமிபட்டியில் ஹைமாஸ் விளக்கு பழுதானதால் மக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இக்கிராமத்தின் மத்தியில், ஊராட்சி அலுவலகம், வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த இடத்தில் உள்ள 45 அடி உயர 'ஹைமாஸ்' விளக்கு மூன்று மாதங்களாக பயன்பாட்டில் இல்லை.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, அத்யாவசிய பணிகளுக்காக வெளியூர் செல்வோர் இரவில் ஊர் திரும்பு கிறோம். ஹைமாஸ் விளக்கு இல்லாததால், இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவம் நடக்கிறது. இச்சூழலில் அச்சத்துடனே நடமாடுகிறோம்.
விஷப்பூச்சிகள் நடமாட்டமும் உள்ளதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறோம். விளக்கை பழுது நீக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் சரி செய்யவில்லை என்றனர்.
ஊராட்சி செயலாளர் சுரேஷ் கூறுகையில், ஹைமாஸ் விளக்கின் மீது ஏறி சரிசெய்ய படிக்கட்டுகள் கிடையாது. உயர் அதிகாரிகளிடம் பேசி விளக்கை மாற்றி அமைக்கவும், அதுவரை மெர்குரி விளக்கை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

