/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் டோல்கேட்:மீண்டும் போராட முடிவு
/
கப்பலுார் டோல்கேட்:மீண்டும் போராட முடிவு
ADDED : ஆக 07, 2025 05:01 AM
திருமங்கலம்: ப்பலுார் டோல்கேட்டை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என 14 ஆண்டுகளாக திருமங்கலம் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிகமாக திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆர்.சி., புக் கேட்டு டோல்கேட் நிர்வாகம் பிரச்னை செய்து வருகிறது.
இதுதொடர்பாக டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் நகர வர்த்தக சங்கம், கால் டாக்ஸி, வாடகை வாகனங்கள் மற்றும் மோட்டார் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் கலந்து கொண்டனர். தற்போது டோல்கேட் நிர்வாகம் டவுன் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர். எனவே இதை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதோடு, அமைச்சர் மூர்த்தியை சந்தித்து மீண்டும் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.