/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் காரைக்குடி கவுன்சிலர் கைது
/
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் காரைக்குடி கவுன்சிலர் கைது
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் காரைக்குடி கவுன்சிலர் கைது
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் காரைக்குடி கவுன்சிலர் கைது
ADDED : அக் 11, 2025 05:47 AM
மதுரை: மதுரை பீபி குளம் பகுதியை சேர்ந்தவர் கபில்முகமது, 36. இவரது கல்லுாரி நண்பர் நூருல் சிகாபுதீன். இவர் மூலமாக காரைக்குடி கவுன்சிலர் பிரகாஷ், கண்ணன், ஈரோடு பிரவீன்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அறிமுகமாகினர். தனியார் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறினர்.
இதை நம்பி ரூ. 1. 46 லட்சம் முதலீடு செய்தார். அதற்கு லாபமாக ரூ. 7 ஆயிரம் கிடைத்தது. 2019 முதல் 2022 வரை பல்வேறு தவணைகளாக, ரூ. 25 லட்சம் மற்றும் நண்பர்களின் பணம் ரூ. 1. 55 கோடி என மொத்தம் ரூ. 1. 80 கோடி முதலீடு செய்து ஏமாந்தார்.
இதுகுறித்து கபில்முகமது மதுரை மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
கண்ணன், பிரவீன்குமார், விஸ்வநாதன், நுாருல் சிகாபுதீன் ஆகியோரை தேடிவருகின்றனர். பிரகாஷ், காரைக்குடி 27வது வார்டு கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகியாக உள்ளார்.