ADDED : செப் 06, 2025 04:20 AM

மதுரை: கோவை மான்செஸ்டர் சர்வதேச பள்ளியில் 19வது ஆசிய மெய்பூகான் கோஜூ-ரியூ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறப்பு பங்கேற்பாளர்களாக கஜகஸ்தான் அணி என 1500 பேர் பங்கேற்றனர்.
இதில் மதுரை எப்.எப்.எப் கோஜூ-ரியூ கராத்தே பள்ளி சார்பில் பயிற்சியாளர் பாரத் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 வயது குமித்தே பிரிவில் சீதாலட்சுமி பள்ளி ஷாலினி ஸ்ரீ, 15 வயது பிரிவில் ஒய்.டபிள்யு.சி.ஏ பள்ளி ஸ்ரீகாந்த் தங்கப்பதக்கம் வென்றனர்.
10 வயது பிரிவில் ஹார்விபட்டி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அனிஷா வெள்ளிப்பதக்கம், 13 வயது குமித்தே மற்றும் கட்டா பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி ஸ்ரீதுலா வெண்கல பதக்கம், 15 வயது கட்டா பிரிவில் தனபால் பள்ளி ஜெயநம்பி வெண்கலம் வென்றனர்.
சீனியர் குமித்தே பிரிவில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பி.பி.ஏ. 2ம் ஆண்டு மாணவர் விஸ்வ நாத் வெள்ளிப்பதக்கம் வென்றார். அகாடமி நிர்வாகிகள் கவிக்குமார், பாரத், மனோஜ் பிரபாகர், ஒருங்கிணைப்பாளர்கள் நிருபன்ராஜ், முத்துசூர்யா, ரியாசுதீன், முகமது ஆதீல் பாராட்டினர்.