ADDED : ஜன 21, 2025 06:12 AM

மதுரை: மதுரையில் கோஜு காய் கராத்தே பள்ளி சார்பாக பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கராத்தே போட்டி நடந்தது. இதில் மதுரை மியாகி வேர்ல்டு கோஜுரியு கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சண்டை பிரிவில் ஆர்த்தி, லிங்கா முதல் பரிசும், நிவேதிதா இரண்டாம் பரிசும் வென்றனர். கட்டா பிரிவில் தாரிகா, முகமது தாஜூதீன், தர்ஷித், யுவன் சங்கர், வருண் முதல் பரிசு பெற்றனர். திலக்தரன், பவனேஸ்வரன், சர்வேஷ், குரு நரேந்திரன், ஆகாஷ் பிரசன்னா, கவுதம், ரித்திகா, பிரஜின், மனு ஸ்ரீ, ஆதேஷ் இரண்டாம் பரிசு பெற்றனர்.
பார்க்கவன், திருநிதா, திருகுகா, அஸ்வந்த், சுபா காமேஷ், கிருத்திக்ராஜ், தேவதர்ஷினி, நித்திஷ் வைபவ், மோகித், ரவிசங்கர், அஜய், ரோஹித், சையத் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி.ராஜா, பயிற்சியாளர்கள் டி.ராஜா, முத்துகிருஷ்ணன், கார்த்திக், அஜய் கிருஷ்ணா, தினேஷ்குமார், பிரியங்கா பாராட்டினர்.