ADDED : ஜூலை 28, 2026 02:44 AM

அ நிறம் | அளவு
மதுரை: சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்மாவட்டங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி தென்காசியில் நடந்தது. கராத்தே போட்டிக்கு கராத்தே பள்ளி இந்திய தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார்.
மதுரை மாணவர்கள் தேவ் அஷ்வந்த், சுகனேஸ்வரன், லக்ஷயா, ஆதிரன் துரை தங்கப்பதக்கம் வென்றனர். கவுதம், சகீம், லோகபரணி, சபரிஸ்வரன், தேஷ்வா, வெள்ளி பதக்கமும் தானேஷ், ஆரோன்துறை வெண்கல பதக்கம் வென்றனர்.
மதுரை இ.பி.ஜி. பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். மாவட்ட செயலாளர்கள் செந்தில், அங்குவேல், பால காமராஜ், முத்துராஜா, அவினாஷ் உடனிருந்தனர்.
