நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மியாகி வேர்ல்டு கோஜூரியு கராத்தே பள்ளி சார்பில் கராத்தே போட்டிகள் நடந்தன.
மாணவர்கள் அத்தாவுல்லா இப்ராஹிம், முகமத் தாஜுதீன் பிளாக் பெல்ட் வென்றனர். தாரிகா, திலக்தரன் பிரவுன் மூன்றாம் நிலை பெல்ட்டும், மீனா பிரியதர்ஷினி, ஆதேஷ் பிரவுன் முதல் நிலை பெல்ட் வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மஞ்சள், பச்சை நிற பெல்ட்களும் வழங்கப்பட்டன.நடுவர்களாக கராத்தே பள்ளி தலைவர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் ராஜா,செயலாளர் முத்துகிருஷ்ணன்,பயிற்சியாளர்கள் தினேஷ்குமார், சாய்சரண் செயல்பட்டனர்.தலைமை பயிற்சியாளர் ராஜா ஏற்பாடு செய்தார்.

