ADDED : டிச 09, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் கோஜூ காய் ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில் வீரர்களுக்கு பட்டயத் தேர்வு அமலா பெத்தண்ணல் நடுநிலை பள்ளியில் நடந்தது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அபிதா, அனுதா, ஆனந்த், வீரா, சுபாஷ், மாலதி, தர்மா, தந்வின், காவியா, கிருத்திக், சர்வேஸ்வர், வர்கீஸ் கறுப்பு பட்டை வென்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மஞ்சள், பச்சை, நீலம், பிரவுன் பட்டைகள் வென்றனர். வென்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் குரு, ஓய்வு பெற்ற போலீஸ் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான் தார்த்திக் பரிசு வழங்கினர்.