ADDED : செப் 02, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் டிராகன் கோஜூரியு கராத்தே பள்ளி, டிராகன் சிலம்பம் சங்கம் சார்பில் மாநில கராத்தே, சிலம்பப் போட்டி நடந்தது.
இதில் நாகமலை புதுக்கோட்டை புரூடர் கிளவுஸ் மாணவர்கள் வெற்றி பெற்றனர். கராத்தே போட்டியில் குழலி, மிசேல் பிரிட்வின் முதல் பரிசு, நியோமி விவின், தர்ஷன் 2ம் பரிசு, அஸ்வந்த் தேவராஜ், வீரபாண்டி 3ம் பரிசு பெற்றனர். சிலம்பத்தில் தியோடர் முதல் பரிசு, சிவகார்த்திகேயன் 2ம் பரிசு பெற்றனர். தாளாளர் ஜெயபால் மைக்கேல், முதல்வர் ஷர்மிளா குமாரி, துணை முதல்வர் ரூபா, பயிற்சியாளர்கள் ராஜா, சுதாகர் பாராட்டினர்.
