ADDED : செப் 02, 2026 04:16 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கீழக்குயில்குடி ஊராட்சி சீனிவாசா காலனி தட்டானுார் பகுதி மெயின் ரோடு பல ஆண்டுகளாக சீரமைப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
விளாச்சேரியில் இருந்து தட்டானுார் வழியாக நான்கு வழிச்சாலை வரை மெயின் ரோடு உள்ளது. அண்ணா பல்கலை., காமராஜ் பல்கலை, திருச்சி, பெங்களூரு, கன்னியாகுமரி, விருதுநகர், நாகர்கோயில் வரை செல்வோர் விளாச்சேரியில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைப்பின்றி உள்ளது. தட்டானுார் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனம் ஓட்டுவோர் சிரமம் அடைகின்றனர். ரோட்டில் பள்ளங்கள் இல்லாத பகுதியே இல்லை என்ற அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த ரோட்டை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை தேவை.
