/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்
/
18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்
ADDED : ஜன 18, 2024 02:19 AM

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் வென்றார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 2ம் இடம் வென்றார். ஆனால் அவர் தான் அதிகம் காளைகளை அடக்கியதாகவும், எண்ணிக்கையில் தவறு இருப்பதாக தெரிவித்து, பரிசை வாங்காமல் சென்றார். 12 காளைகளை அடக்கி எம்.குன்னத்துாரை சேர்ந்த திவாகர் 3ம் இடம் வென்றார்.
கார் வென்ற 'கட்டப்பா'
சிறந்த காளையாக திருச்சி மேலுாரைச் சேர்ந்த குணா என்வரின் 'கட்டப்பா' என்ற காளை முதலிடம் பிடித்தது. அக்காளைக்கு கார், பசுமாடு வழங்கப்பட்டது. மதுரை காமராஜர்புரம் சவுந்தரின் 'வெள்ளைக்காளி' காளை 2வது பரிசு வென்று, பைக்கை தட்டிச்சென்றது.