ADDED : ஆக 07, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் உசிலம்பட்டி ஆர்.சி., பெண்கள் பள்ளி ஏற்று நடத்திய உசிலம்பட்டி குறுவட்ட தடகள போட்டிகள் நடந்தது. இதில் கருமாத்துார் கிளாரட் பள்ளியில் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பங்கேற்றவர்கள் மோபிக்க்ஷா, சுதர்ஷினி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மாணவிகள் பிரிவில் குறுவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், விளையாட்டு ஆசிரியர்கள் ஆனந்த், அரவிந்த், கதிர், பொருளாளர் செல்வமணியை பள்ளித் தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.