ADDED : ஜூன் 04, 2025 01:31 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வண்டியூர் ரிங்ரோடு மஸ்தான்பட்டி கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர், தனசெல்வம், பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகர் தி.மு.க., சார்பில் சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலைக்கு நகர் செயலாளர் தளபதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., மகளிரணி சார்பில் தமிழ்ச் சங்கம் ரோட்டில் மேயர் இந்திராணி தலைமையில் ஊர்வலம் நடந்தது. துணை செயலாளர் சின்னம்மாள், தொண்டரணி அமைப்பாளர் நுார்ஜஹான், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, கவுன்சிலர்கள் அந்தோணியம்மாள், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.