/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாள் விழா
/
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாள் விழா
ADDED : ஏப் 12, 2025 05:05 AM
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கல்லூரி நாள் விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், உப தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். பொருளாதாரத் துறை தலைவர் பழனி வரவேற்றார். முதல்வர் ராமசுப்பையா ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லுாரி முன்னாள் மாணவரான ஜி.எஸ்.டி., கூடுதல் கமிஷனர் வெங்கடேஸ்வரன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி பேசியதாவது: புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் நிமிர்ந்து நடக்க அது உதவும். தொடர் பயிற்சி, முயற்சியுடன் எதிர்கொண்டால் எச்செயலும் வெற்றி அடையும். விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இணைய தளங்களை படிப்பதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என்றனர்.
சிறந்த மாணவருக்கான விருது வணிகவிய மாணவர் அபிலேஷ், சிறந்த மாணவிக்கான விருது பொருளாதார மாணவி ஹரிணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பிதாமகன் விருது வரலாற்று மாணவர் பாஸ்கரராஜாவுக்கும், சிறந்த பிதாமகள் விருது இயற்பியல் மாணவி சுவேதாவுக்கும் வழங்கப்பட்டது. டீன் அழகேசன் நன்றி கூறினார்.

