ADDED : ஆக 13, 2025 02:23 AM

திருப்பரங்குன்றம்; மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு கிளப்பிற்கு மாநில, மாவட்ட அளவில் விருதுகள் கிடைத்துள்ளன.
மாணவர்களை தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார் சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பாராட்டினர்.
செயலாளர் ஸ்ரீதர் பேசுகையில், ''கிளப் துவங்கப்பட்டு 50 மாணவர்கள் அதில் உள்ளனர். இவர்களுடன் பிற 13 குழு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தினர். இதன் காரணமாக மாநில விருதை துணைமுதல்வர் உதயநிதி வழங்கினார். மாவட்ட அளவில் முதல் பரிசை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி வழங்கினர்'' என்றார்.